< Back
சினிமா செய்திகள்
விஜய்சேதுபதி படம் ரிலீஸ் தள்ளிவைப்பு
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

தினத்தந்தி
|
31 Oct 2022 2:47 PM IST

விஜய்சேதுபதி நடித்த மேரி கிறிஸ்துமஸ் படத்தை அடுத்த வருடத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள விஜய்சேதுபதி தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். இமேஜ் பார்க்காமல் மற்ற கதாநாயகர்கள் படங்களில் வில்லனாகவும் நடிக்கிறார். தற்போது இந்தியில் அந்தாதூன் வெற்றிப்படத்தை எடுத்த ஸ்ரீராம் ராகவன் இயக்கும் மேரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ளார். இதில் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கத்ரினா கைப்பும் நடித்து இருக்கிறார். இந்த படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகலாம் என்று பேசப்பட்டது. அதனை படக்குழுவினர் மறுத்து தியேட்டர்களில் வெளியாகும் என்று உறுதிப்படுத்தினர்.

மேரி கிறிஸ்துமஸ் படம் டிசம்பர் மாதம் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். தற்போது படத்தை அடுத்த வருடத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். படத்தின் தொழில் நுட்ப பணிகள் முடியாததாலும் திட்டமிட்ட தேதியில் வேறு படங்கள் திரைக்கு வருவதாலும் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மேலும் செய்திகள்