'சந்து சாம்பியன்' பட டிரெய்லரை பாராட்டி பதிவிட்ட கத்ரீனா கைப்
|நடிகை கத்ரீனா கைப் இப்படத்தின் டிரெய்லரை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பகிர்ந்துள்ளார்.
மும்பை,
பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் டிரண்ட் இந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறது. அதிலும் முக்கியமாக விளையாட்டு வீரர்களின் தன்னம்பிக்கையூட்டும் கதைகள் சினிமா மூலம் சொல்லப்பட்டு வருகின்றன. தங்கல், எம்.எஸ் தோனி உள்ளிட்ட படங்கள் அதற்கு சிறந்த எடுத்துகாட்டுகளாகும்.
அந்த வகையில் இந்தியாவுக்காக பாராஒலிம்பிக்கில் முதல் முதலில் தங்கப்பதக்கம் வென்ற முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாறு 'சந்து சாம்பியன்' என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக உருவாகி வருகிறது.
கபீர் கான் இயக்கும் இப்படத்தில் முரளிகாந்த் கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடிக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்நிலையில், நடிகை கத்ரீனா கைப் இப்படத்தின் டிரெய்லரை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பகிர்ந்துள்ளார். அதனுடன், காத்திருக்க முடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.