< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சுழல்' வெப்தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
|4 Jun 2022 9:50 PM IST
நடிகர் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சுழல்' வெப்தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
"விக்ரம் வேதா" திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி தற்போது வெப் தொடர் ஒன்றுக்கு திரைக்கதை எழுதியுள்ளனர். இந்த வெப் தொடருக்கு 'சுழல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த தொடரை பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கியுள்ளனர்.
துப்பறியும் திரில்லர் வகை கதையம்சம் கொண்ட தொடராக உருவாகியுள்ள இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என ஐந்து மொழிகளில் இந்த தொடர் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த வெப்தொடர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'சுழல்' வெப்தொடர் வருகிற ஜூன் 17-ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.