கத்தனார் மலையாள படத்தில் இணையும் பிரபுதேவா
|13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா மலையாள சினிமா படத்தில் நடிக்கிறார்.
மலையாள 'திகில்' படம் கத்தனார். இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா- பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கின்றனர்.காட்டு மந்திரவாதி வேடத்தில் ஜெய சூர்யாவும், பேய் வேடத்தில் அனுஷ்காவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தை ரோஜின் தாமஸ் இயக்குகிறார். அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படம் ஆகும்.அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக நம்பப்படும் கேரளப் பாதிரியார் கடமட்டத்து கத்தனார் பற்றிய கதைகளை அடிப்படையாக கொண்டது. இந்த படத்திற்கு ராகுல் இசையமைக்கிறார். நவீன தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி இப்படம் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் பிரபுதேவா கத்தனார் பட நடிகர்களுடன் இணைந்து உள்ளார். பிரபு தேவாவை முன்னணி நடிகர் ஜெயசூர்யா, தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் மற்றும் நிர்வாகத் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்கும் புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்.
சந்தோஷ் சிவன் இயக்கிய உறுமி படத்திற்குப் பிறகு தற்போது பிரபுதேவா மலையாள சினிமா படத்தில் நடிக்கிறார். இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.