விபத்தில் சிக்கிய 'கட்சி சேர' பாடல் நடிகை...புகைப்படம் வைரல்
|'கட்சி சேர' பாடலில் சம்யுக்தா விஸ்வநாதனின் நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
சென்னை,
சமீபத்தில் வெளியான 'கட்சி சேர' பாடல் இணையத்தில் வைரலானது. இந்த பாடலுக்கு பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். மேலும், அவருடன் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த சம்யுக்தா விஸ்வநாதன் நடித்திருந்தார்.
இந்தப் பாடலில் சம்யுக்தா விஸ்வநாதனின் நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இந்த பாடல் சமூக வலைதளங்கள் அனைத்திலும் வைரலானதால் சம்யுக்தா பிரபலமானார். இந்நிலையில் சம்யுக்தா, தான் விபத்தில் சிக்கிக்கொண்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்துடன் பகிர்ந்த பதிவில்,
என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம், என்னுடைய வெற்றிகளை மட்டுமல்ல, என்னுடைய வாழ்க்கையில் நிகழும் உண்மையான மற்ற தருணங்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு கட்டத்திலும் இந்த பிரபஞ்சம் நான் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று எனக்கு நினைவுபடுத்துகிறது. ஒரு முறை கால் தசையில் காயம். மற்றொரு முறை கணுக்காலில் சுலுக்கு . தற்போது மூக்கில் காயம் ஏற்பட்டிருக்கிறது. வாழ்க்கையில் சில நல்ல தருணங்களும் சில கெட்ட தருணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு முறையும் கற்றுக் கொண்டு கொஞ்சம் ஓய்வெடுத்து மறுபடியும் வேலைக்கு திரும்பிச் செல்வதுதான் வழக்கம். இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் சம்யுக்தாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.