< Back
சினிமா செய்திகள்
சிசுக்கொலையை தடுக்க வந்த கருவறை..!
சினிமா செய்திகள்

சிசுக்கொலையை தடுக்க வந்த 'கருவறை'..!

தினத்தந்தி
|
25 Aug 2023 12:57 PM IST

‘கருவறை' ஆவண படத்துக்காக இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது

கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்த 'கருவறை' குறும்படம், ரசிகர்களை மிகவும் பாதித்த படம் ஆகும். ரித்விகா, மிதுன், வடிவுக்கரசி, அஞ்சனா தமிழ்ச்செல்வி, ரோகிணி ஆகியோர் நடித்த இந்த படம், குழந்தையின்மையால் பல லட்சம் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த நாட்டில்தான், வறுமையினால் பல லட்சம் உயிர்கள் கருவிலேயே கலைக்கப்படும் அவலத்தை எடுத்துக்கூறியது.

முதல் குழந்தை இருக்கும் சூழ்நிலையில் 2-வதாக கர்ப்பம் தரிக்கும் நடுத்தர குடும்பத்து பெண்மணி, எப்படி எல்லாம் சமூகத்தின் ஏச்சு பேச்சுகளுக்கு ஆளாகிறார் என்பதை இந்த படம் அப்பட்டமாக உணர்த்தியது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

இந்த ஆவண படத்துக்காக இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்