< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
|8 Sept 2022 5:21 AM IST
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா இசையில் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 'விருமன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'விருமன்' திரைப்படம் வருகிற 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.