< Back
சினிமா செய்திகள்
கார்த்தியின் விருமன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

கார்த்தியின் 'விருமன்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
30 July 2022 1:13 PM IST

ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி பேசும் விருமன் திரைப்படம் தென்தமிழகத்தைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ளது.

அதிதி சங்கர் இந்த திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த பாசக்கார மதுரைப் பெண்ணாக நடித்துள்ளார். விருமன் திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து தங்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், அதிதி சங்கரின் அறிமுக படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது.


மேலும் செய்திகள்