கார்த்தியின் புதிய படம்
|கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் வந்தன. பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் கடந்த மே மாதம் வெளியானது. தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடியும் தருவாயில் உள்ளது.
இந்த படத்துக்கு பிறகு கார்த்தி நடிக்கும் படத்தை பிரேம் குமார் டைரக்டு செய்ய பேசி வருவதாக தகவல் கசிந்துள்ளது. பிரேம் குமார் ஏற்கனவே விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தை டைரக்டு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக்கு, பிரேம்குமார் கதை சொல்லி இருப்பதாகவும், அவருக்கும் கதை பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் அரவிந்தசாமியையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேசி வருவதாக கூறப்படுகிறது. கார்த்திக்கு, அரவிந்தசாமி வில்லனாக நடிக்கிறாரா அல்லது குணசித்திர கதாபாத்திரத்தில் வருகிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை.
இது குடும்ப செண்டிமென்டுடன் அதிரடி சண்டை கதையம்சத்தில் இருக்கும் என்கின்றனர்.