< Back
சினிமா செய்திகள்
கார்த்தியின் 25-வது படம்
சினிமா செய்திகள்

கார்த்தியின் 25-வது படம்

தினத்தந்தி
|
9 Nov 2022 8:14 AM IST

கார்த்தி அடுத்து எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் 25-வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

கதாநாயகனாக அறிமுகமான பருத்திவீரன் முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த கார்த்தி தமிழ் பட உலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். அவரது நடிப்பில் இந்த வருடம் அடுத்தடுத்து வந்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் நல்ல வசூல் பார்த்துள்ளன. பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக அறிவித்து உள்ளார். இதுவரை 24 படங்களில் நடித்து முடித்துள்ள கார்த்தி அடுத்து எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் 25-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ராஜு முருகன் டைரக்டு செய்கிறார். இவரது இயக்கத்தில் 2016-ல் வெளியான ஜோக்கர் சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். டைரக்டர் விஜய் மில்டன், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

மேலும் செய்திகள்