< Back
சினிமா செய்திகள்
சிவகுமாரை கவர்ந்த கார்த்திக் படம்
சினிமா செய்திகள்

சிவகுமாரை கவர்ந்த கார்த்திக் படம்

தினத்தந்தி
|
22 Sept 2023 11:32 AM IST

கார்த்திக் நீண்ட இடைவெளிக்கு பிறகு நாயகனாக நடித்துள்ள படம் `தீ இவன்'. இதில் இன்னொரு நாயகனாக சுமன் ஜெ. நடித்துள்ளார். சுகன்யா, ராதாரவி, ஶ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம்புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.

படத்தை `ரோஜா மலரே', `அடடா என்ன அழகு', `சிந்துபாத்' ஆகிய படங்களை இயக்கிய ஜெயமுருகன் டி.எம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்து இசையமைத்து தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு சன்னிலியோன் கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார்.

டைரக்டர் ஜெயமுருகன், நாயகன் சுமன் ஜெ. ஆகிய இருவரும் நடிகர் சிவகுமாரை சந்தித்து படத்தின் பாடல்கள், டிரெய்லரை காட்டினர். அது சிவகுமாரை கவர்ந்தது. அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது என்றும், நம் மண்ணின் கலாசாரத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளதால், இந்தப் படமும் உறுதியாக வெற்றிபெறும் என்றும் அவர் வாழ்த்தி பாராட்டினார். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். நிர்மலாதேவி ஜெயமுருகன் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு:ஒய்.என்.முரளி, பின்னணி இசை: ஏ.ஜே.அலிமிர்ஸா.

மேலும் செய்திகள்