நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் - போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு
|சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கியுள்ள 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் 'புறநானூறு' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில், சூர்யா நடிக்கும் 44-வது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'சூர்யா 44' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் பின்னணியில் தீ பற்றி எரிந்துகொண்டிருக்க ரப்பர் மரம் ஒன்றில் அம்பு குத்தப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் 'லவ் லாப்டர் வார்' (love Laughter war) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.