< Back
சினிமா செய்திகள்
ஹீரோயின் இல்லாத படத்தில் நடிக்கும் கார்த்தி... கும்பகோணத்தில் படப்பிடிப்பு தொடக்கம்...!

Image Credits: Twitter.com/@Karthi_Offl

சினிமா செய்திகள்

ஹீரோயின் இல்லாத படத்தில் நடிக்கும் கார்த்தி... கும்பகோணத்தில் படப்பிடிப்பு தொடக்கம்...!

தினத்தந்தி
|
17 Nov 2023 5:46 PM IST

நடிகர் கார்த்தியின் 27வது படத்தை 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார்.

சென்னை,

நடிகர் கார்த்தியின் 25வது படம் என்ற பெருமையுடன் வெளியான திரைப்படம் 'ஜப்பான்'. இயக்குனர் ராஜு முருகன் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படம் வெளியான நாள் முதலே மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்த படம் ரூ.12 கோடி வசூலித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் கார்த்தியின் 2 புதிய படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கார்த்தியின் 26வது படத்தை 'சூது கவ்வும்' படத்தை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியின் 27வது படத்தை '96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க உள்ளார். நடிகர் சூர்யாவின் '2டி எண்டெர்டைன்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோயின் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று கும்பகோணத்தில் தொடங்கியுள்ளது. கைதி திரைப்படத்தை தொடர்ந்து ஹீரோயின் இல்லாத படத்தில் கார்த்தி நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்