< Back
சினிமா செய்திகள்
கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
சினிமா செய்திகள்

கார்த்தி நடிப்பில் வெளியான 'சர்தார்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தினத்தந்தி
|
12 Nov 2022 9:23 PM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'சர்தார்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சர்தார்'. இந்த படத்தில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சர்தார் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் 'சர்தார்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சர்தார்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஆஹா ஓடிடி தளம் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்