'சர்தார்2' படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடக்கம்?
|மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘சர்தார்2’ படத்திற்கான பூஜை போட்டுள்ளார். இதன் படப்பிடிப்பும் சீக்கிரம் தொடங்க உள்ளது.
பிரேம்குமார் இயக்கத்தில் 'மெய்யழகன்', நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியாரே' ஆகிய படங்கள் இவரது கைவசம் உள்ளது. இதற்கடுத்து சத்தமில்லாமல் 'சர்தார்2' பணிகளையும் தொடங்கியுள்ளார் கார்த்தி.
கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் பி.எஸ்.மித்ரனின் இயக்கிய படம் 'சர்தார்'. தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. விறுவிறுப்பான இதன் திரைக்கதைக்காகவே இதன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்க ஆரம்பித்தனர் கார்த்தியின் ரசிகர்கள்.
இந்த சூழ்நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பூஜை நடந்து முடிந்துள்ளது. வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள். கடந்த மாதத்தில் கல்லூரி விழா ஒன்றில் நடிகர் கார்த்தி பேசியபோது, அடுத்த வருடம் 'கைதி2' தொடங்கும் என அறிவித்திருந்தார்.