< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கார்த்தி-ராஜுமுருகன் கூட்டணியில் உருவாகும் 'ஜப்பான்' - படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
|10 Nov 2022 4:31 AM IST
‘ஜப்பான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராஜுமுருகன். இவரது இயக்கத்தில் அடுத்து உருவாகும் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு 'ஜப்பான்' என பெயரிடப்பட்டுள்ளது.
இதில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' பட நாயகி அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க உள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அதோடு இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னனி நகைச்சுவை நடிகர் சுனில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் 'ஜப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.