'சர்தார் 2' படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் உடலுக்கு கார்த்தி நேரில் அஞ்சலி
|'சர்தார் 2' படப்பிடிப்பின் போது தவறி விழுந்து உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலையின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,
'சர்தார்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 'சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த 15-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். மேலும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சென்னை சாலிகிராமத்தில் 'சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலையின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.