< Back
சினிமா செய்திகள்
வா வாத்தியார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

'வா வாத்தியார்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
25 May 2024 7:42 PM IST

கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி 26 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். படத்திற்கு 'வா வாத்தியார்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களுள் ஒருவரான நடிகர் கார்த்தி இன்று தன் 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது 26-வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

"காதலும் கடந்து போகும்" படப்புகழ் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

எம்.ஜி.ஆர் ரசிகராக நடிகர் கார்த்தி இப்படத்தில் நடிப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது எம்ஜிஆர் வேடமிட்ட பல நபர்கள் சூழ, கார்த்தி இடம்பெற்றிருக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கார்த்தி வித்தியாசமான போலிஸ் கெட்டப்பில் சிவப்பு நிற கண்ணாடியை அணிந்து காணப்படுகிறார்.மேலும் இப்படத்துக்கு 'வா வாத்தியார்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தின் மூலம் கார்த்தியுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள நிலையில், சத்யராஜ் இப்படத்தில் வில்லனாகவும், நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய வேடத்திலும் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்