< Back
சினிமா செய்திகள்
கார்த்தி படத்தின் பெயர் கசிந்ததா?
சினிமா செய்திகள்

கார்த்தி படத்தின் பெயர் கசிந்ததா?

தினத்தந்தி
|
31 Aug 2023 7:29 AM IST

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். தற்போது நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் எம்.ஜி.ஆரின் ரசிகராக கார்த்தி நடிப்பதாக கூறப்படுகிறது. எனவே படத்துக்கு எம்.ஜி.ஆரை தொடர்புபடுத்திய தலைப்பு வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் படத்துக்கு 'வா வாத்தியாரே' என்ற பெயரை வைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இந்த பெயரை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

ஆனாலும் இதுதான் படத்தின் பெயரா? என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

மேலும் செய்திகள்