3 படங்களில் நடிக்கும் கார்த்தி
|கார்த்தி 3 படங்களில் நடித்து வருகிறார். இவரது 25-வது படமான 'ஜப்பான்' படத்தின் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தை ராஜு முருகன் டைரக்டு செய்கிறார்.
படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி பலகோடி செலவில் அரங்கு அமைத்து விரைவில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்துக்கு பிறகு நலன் குமாரசாமி இயக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த இரண்டு பெரிய படங்களை முடித்த பிறகு கார்த்தி நவம்பரில் தனது 27-வது பட இயக்குனர் பிரேம் குமாருடன் இணைகிறார். இதில் அரவிந்தசாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சூர்யா தயாரிக்கிறார்.
'பிரீ ரிலீஸ் பிசினஸ்' எனப்படும், பட வெளியீட்டுக்கு முன்பான வியாபாரத்தில் தற்போது கார்த்தியின் படங்கள் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்