25-வது படம் ரிலீசையொட்டி 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் கார்த்தி
|கார்த்தி தனது 25-வது படம் தீபாவளிக்கு வெளியாவதை கொண்டாடும் வகையில் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
கார்த்தி 'சர்தார்', 'பொன்னியின் செல்வன்' படங்களுக்கு பிறகு தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் தயாராகி உள்ள 'ஜப்பான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இது கார்த்தியின் 25-வது படம் ஆகும்.
'ஜப்பான்' படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். படத்தில் வரும் கார்த்தியின் தோற்றம் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது 25-வது படம் தீபாவளிக்கு வெளியாவதை கொண்டாடும் வகையில் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க கார்த்தி ஏற்பாடு செய்துள்ளார்.
கார்த்தியின் அறிவுறுத்தலை ஏற்று ரசிகர்கள் அன்னதானம் வழங்கும் பணியை தொடங்கி உள்ளனர். ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதற்கு பதிலாக, தினமும் ஆயிரம் பேர் வீதம் தொடர்ந்து 25 நாட்கள் உணவு வழங்க உள்ளனர்.
கார்த்தியின் பேனர் கட்டிய வேனில் உணவை தெரு தெருவாக கொண்டு சென்று பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.