< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கார்த்தி ஜோடியாக மீண்டும் ராஷ்மிகா
|6 Oct 2022 12:59 PM IST
ராஜு முருகன் இயக்கி வரும் ‘ஜப்பான்' என்ற படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தென் இந்தியாவை கலக்கி வரும் முக்கியமான கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா இருக்கிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக 'சுல்தான்' என்ற படத்தில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
இதற்கிடையில் கார்த்தி ஜோடியாக மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய படத்தில் ராஷ்மிகா நடிக்க இருக்கிறார். ராஜு முருகன் இயக்கி வரும் 'ஜப்பான்' என்ற படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். 'புஷ்பா' படத்தில் வில்லனாக நடித்த சுனில் இந்த படத்தில் வில்லனாக மிரட்ட உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 2-ம் வாரம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நடிகையான ராஷ்மிகா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பது தமிழ் ரசிகர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது.