< Back
சினிமா செய்திகள்
கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சுழல் வெப் தொடரின் டிரைலர் வெளியீடு..!
சினிமா செய்திகள்

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சுழல்' வெப் தொடரின் டிரைலர் வெளியீடு..!

தினத்தந்தி
|
9 Jun 2022 4:58 AM IST

கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சுழல்' வெப் தொடரின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

"விக்ரம் வேதா" திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி தங்களுடைய சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் வெப் தொடர் ' சுழல்- தி வோர்டெக்ஸ்'.

இயக்குனர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வெப் தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஆர்.பார்த்திபன், சந்தானபாரதி, பிரேம், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஜூன் 17-ந் தேதி இந்த தொடர் வெளியாக உள்ளது. துப்பறியும் திரில்லர் வகை கதையம்சம் கொண்ட தொடராக உருவாகியுள்ள இதன் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தொடருக்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகப்படுத்தியுள்ளது.



மேலும் செய்திகள்