< Back
சினிமா செய்திகள்
பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி நடிக்கும் மெய்யழகன் படத்தின் புது போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி நடிக்கும் 'மெய்யழகன்' படத்தின் புது போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
24 May 2024 9:06 PM IST

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி உள்ள 'மெய்யழகன்' படத்தின் புது போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ஜப்பான். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. இதையடுத்து தனது அடுத்தடுத்த படங்களை வெற்றிப்படங்களாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய பிரபலமான இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார். இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'மெய்யழகன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதல் போஸ்டரை சில மணிநேரங்களுக்கு முன் வெளியிட்ட நிலையில், தற்பொழுது படத்தின் அடுத்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இப்போஸ்டரில் கார்த்தி காளை மாட்டை பார்த்து சிரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இப்போஸ்டர் 1980 களில் வெளியிடப்பட்ட திரைப்படங்களின் போஸ்டரை போல் கருப்பு வெள்ளையில் காட்சி அளிக்கிறது. இப்போஸ்டரை கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்