< Back
சினிமா செய்திகள்
படத்தில் சம்பளம் எனக்கு முக்கியமில்லை, இதுதான் முக்கியம் - நடிகை கரீனா கபூர்
சினிமா செய்திகள்

படத்தில் சம்பளம் எனக்கு முக்கியமில்லை, இதுதான் முக்கியம் - நடிகை கரீனா கபூர்

தினத்தந்தி
|
20 July 2024 5:38 PM IST

நடிகை கரீனா கபூர் தனது 20 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

மும்பை,

பாலிவுட் நடிகர்களில் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவர் கரீனா கபூர். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் கடைசியாக 'க்ரூ' என்ற படத்தில் நடித்தார். இதில் தபு, கபில் சர்மா மற்றும் கிருத்தி சனோன் ஆகியோருடன் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், தனது 20 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையைப் பற்றி பேசியுள்ளார். அதில், தான் எப்போதும் படத்தின் தரம் மற்றும் கதாபாத்திரத்தின் மீதான ஆர்வம் ஆகியவற்றிற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாக கூறினார். தான் எப்போதும் சம்பளத்தில் கவனம் செலுத்துவதில்லை என்று கூறினார். தனக்கு சம்பளத்தை விட தனிப்பட்ட திருப்தி மற்றும் கதாபாத்திரத்தின் தரம் ஆகியவை முக்கியம் என குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இவர் 'சிங்கம் அகைன்' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தினை வருகிற நவம்பர் 1-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்