< Back
சினிமா செய்திகள்
இந்தியில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்
சினிமா செய்திகள்

இந்தியில் 'ரீமேக்' ஆகும் 'பரியேறும் பெருமாள்'

தினத்தந்தி
|
26 April 2023 5:45 AM IST

பரியேறும் பெருமாள் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.

தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய அங்குள்ள இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். வீரம், கைதி, ராட்சசன், மாநகரம், காஞ்சனா உள்ளிட்ட பல படங்கள் இந்திக்கு போய் உள்ளன.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் ஜோடியாக நடித்து 2018-ல் திரைக்கு வந்த பரியேறும் பெருமாள் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.

பரியேறும் பெருமாள் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இந்தி தயாரிப்பாளரும் டைரக்டருமான கரண் ஜோகர் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

பரியேறும் பெருமாள் இந்தி ரீமேக்கில் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்க சித்தார்த் சதுர்வேதி பெயர் அடிபடுகிறது.

காதலை மையமாக வைத்து சாதிய பாகுபாடுகளை பேசும் படமாக பரியேறும் பெருமாள் தயாராகி இருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகள்