< Back
சினிமா செய்திகள்
டுவிட்டரில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல பாலிவுட் இயக்குனர்: காரணம் என்ன?
சினிமா செய்திகள்

டுவிட்டரில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல பாலிவுட் இயக்குனர்: காரணம் என்ன?

தினத்தந்தி
|
10 Oct 2022 7:15 PM IST

கரண் ஜோகர் தற்போது டுவிட்டர் தளத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.

மும்பை,

பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர் கரண் ஜோகர். 50 வயதான இவர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர். பாலிவுட் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல பிரபலங்கள் இவர் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர்கள்.

இவர் காபி வித் கரண் என்ற பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கரண் ஜோகர் தற்போது டுவிட்டர் தளத்தில் இருந்து வெளியேறி உள்ளார். தனது டுவிட்டர் கணக்கை நீக்கியுள்ள அவர், அது குறித்து தனது கடைசி டுவீட் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் தனது கடைசி டுவீட்டில், "அதிகளவில் நேர்மறை ஆற்றல்களை (பாசிட்டிவ் எனர்ஜி) விரும்புகிறேன். அதன் முதல் படியாக டுவிட்டர் தளத்தில் இருந்து விலகுகிறேன்" என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்