'காந்தாரா' திரைப்படத்தின் 100-வது நாளை கொண்டாடிய படக்குழுவினர்
|காந்தாரா திரைப்படத்தின் 100 நாட்கள் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடினர்.
சென்னை,
கடந்த ஆண்டு வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்.
இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது. மொத்தமாக ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.
இந்த நிலையில் காந்தாரா திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக காந்தாரா படக்குழுவினர் வெற்றி விழாவை கொண்டாடினர். இந்த விழாவின் போது படக்குழுவினர் அனைவருக்கும் வெண்கல சிலைகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.
Celebrating 100 days of timeless tales, cherished memories#Kantara A Souvenir to Remember @shetty_rishab #VijayKiragandur @hombalefilms @gowda_sapthami @AJANEESHB @actorkishore @AAFilmsIndia @GeethaArts @DreamWarriorpic @PrithvirajProd @KantaraFilmpic.twitter.com/1nrBLaVNeg
— Hombale Group (@HombaleGroup) February 6, 2023 ">Also Read: