< Back
சினிமா செய்திகள்
காந்தாரா- 2 படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

'காந்தாரா- 2' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
25 Nov 2023 12:31 PM IST

ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

சென்னை,

கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் 'காந்தாரா'. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது. ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார்.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்ச்சியாக (Sequel) இல்லாமல், காந்தாராவின் அறிமுகமாக (Prequel) உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். அதன்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பிறகு ரிஷப் ஷெட்டி படத்தின் கதையை எழுதி முடித்துள்ளார். முன் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 'காந்தாரா-2' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வருகிற 27-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்துக்கு 'காந்தாரா: பாகம் ஒன்று' என்று பெயரிடப்பட்டுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகும் 'காந்தாரா 2' அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்