< Back
சினிமா செய்திகள்
கண்ணே செல்ல கண்ணே... அருண் விஜய் படத்தின் முதல் பாடல் வெளியானது..!
சினிமா செய்திகள்

கண்ணே செல்ல கண்ணே... அருண் விஜய் படத்தின் முதல் பாடல் வெளியானது..!

தினத்தந்தி
|
3 Jan 2024 10:30 PM IST

அருண் விஜய் நடித்துள்ள 'மிஷன் சாப்டர்-1' திரைப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'மிஷன் சாப்டர் -1 அச்சம் என்பது இல்லையே'. இந்த படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ், ஜேசன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, 'கண்ணே செல்ல கண்ணே' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் எழுதியுள்ள இந்த பாடலை ரவி ஜி மற்றும் உத்தாரா உன்னிகிருஷ்ணன் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'மிஷன் சாப்டர்-1 அச்சம் என்பது இல்லையே ' படம் வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்