< Back
சினிமா செய்திகள்
Kannappa film team released the poster on Akshay Kumars birthday
சினிமா செய்திகள்

சிவனாக அக்சய் குமார்: பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் வெளியிட்ட 'கண்ணப்பா' படக்குழு

தினத்தந்தி
|
9 Sept 2024 2:07 PM IST

அக்சய் குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக 'கண்ணப்பா' படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் கண்ணப்பா. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் மோகன்பாபு, சரத்குமார், காஜல் அகர்வால், அக்சய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

இன்று நடிகர் அக்சய் குமார் தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், கண்ணப்பா படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அக்சய் குமாரின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் சிவனாக அக்சய் குமார் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்