< Back
சினிமா செய்திகள்
ரஜினியை சந்தித்த நடிகர் சிவராஜ்குமார்
சினிமா செய்திகள்

ரஜினியை சந்தித்த நடிகர் சிவராஜ்குமார்

தினத்தந்தி
|
21 Nov 2022 3:38 PM IST

ரஜினிகாந்தை சிவராஜ்குமார் சந்தித்து பேசிய புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. ரஜினிகாந்த் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவரது தோற்றத்தை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டு உள்ளனர். ஜெயிலர் படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகளும் ஒவ்வொருவராக படப்பிடிப்பில் தற்போது இணைந்து வருகிறார்கள். அவர்கள் தனியாக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு இறுதியில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளை எடுக்க உள்ளனர். ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கிறார். அவரும் இப்போது படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். முன்னதாக ரஜினிகாந்தை சிவராஜ்குமார் சந்தித்து பேசினார். அந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் இணைந்து இருக்கிறார்.

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனும் நடிக்கிறார் என்று கிசுகிசுக்கள் வந்தன. அதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் படப்பிடிப்பில் சிவராஜ்குமாரும், சிவகார்த்திகேயனும் சந்தித்த புகைப்படங்களும் வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன. ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா அல்லது சிவராஜ்குமாரை சந்திக்க சென்றாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்