தமிழில் முதல் படம் ... யோகிபாபு நடிக்கும் படத்தில் அறிமுகமாகும் கன்னட நடிகர்
|நடிகர் ரூபேஷ் ஷெட்டி, யோகி பாபுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
பிரபல கன்னட நடிகர் ரூபேஷ் ஷெட்டி. கன்னட பிக் பாஸ் சீசன் 9ன் வெற்றியாளரான இவர் தற்போது தமிழ் படத்தில் முதன்முதலாக நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது இயக்குனர் அம்ருதா சாரதி இயக்கத்தில் மது தயாரிக்கும் 'சன்னிதானம் போ' படத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிகர் யோகிபாபு, பிரமோத் ஷெட்டி, ரூபேஷ் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பை நடிகர் ரூபேஷ் ஷெட்டி, யோகி பாபுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும் புகைப்படத்துடன் பகிர்ந்த பதிவில், 'தமிழில் மிகப்பெரிய காமெடி நடிகராக வளம் வரும் யோகி பாபு சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். யோகி பாபு சாருடன் என் முதல் தமிழ் படமான 'சன்னிதானம் போ' படத்தில் நடிப்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி.உங்களுடைய ஆசீர்வாதம் எப்போதும் என்னுடன் இருக்கட்டும்'. இவ்வாறு தெரிவித்துள்ளார்.