< Back
சினிமா செய்திகள்
விபத்தில் காலை இழந்த கன்னட நடிகர்
சினிமா செய்திகள்

விபத்தில் காலை இழந்த கன்னட நடிகர்

தினத்தந்தி
|
28 Jun 2023 8:03 AM IST

துருவன் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் உறவினர்

பிரபல கன்னட இளம் நடிகர் துருவன் என்கிற சுரஜ் குமார். இவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் சில பிரச்சினைகளால் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது 'ரதம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரியா பிரகாஷ் வாரியருடன் இணைந்தும் இன்னொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த நிலையில் துருவன் மைசூரில் இருந்து ஊட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மைசூர் குட்டுபேட் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி மீது அவரது பைக் மோதியது. இதில் துருவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மைசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இந்த விபத்தில் துருவன் வலதுகால் முழுமையாக நொறுங்கியது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து அவரது வலது காலை எடுத்து விட்டதாகவும், தற்போது துருவன் நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இது கன்னட திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. துருவன் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்