< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

கங்குவா படத்தின் டிரெய்லர் வெளியானது

தினத்தந்தி
|
12 Aug 2024 2:10 PM IST

இயக்குனர் சிவா, நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. 'கங்குவா' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இயக்குநர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளனர். வனத்திற்குள் வாழ்ந்த பழங்கால மனிதர்கள், அவர்களின் தோற்றம், போர்க்காட்சிகள் என பல இடங்களில் அனிமேஷன் மற்றும் விஎப்எக்ஸ் பணிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் வரவேற்பைப் பெறும் எனத் தெரிகிறது.

மேலும் செய்திகள்