< Back
சினிமா செய்திகள்
24 மணி நேரத்தில் 2 கோடி பார்வையாளர்களைக் கடந்த கங்குவா பட டிரெய்லர்
சினிமா செய்திகள்

24 மணி நேரத்தில் 2 கோடி பார்வையாளர்களைக் கடந்த 'கங்குவா' பட டிரெய்லர்

தினத்தந்தி
|
13 Aug 2024 5:59 PM IST

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்பட டிரெய்லர் 24 மணி நேரத்தில் யூடியூபில் 2 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'கங்குவா' படத்தின் டிரெய்லரை நேற்று வெளியிட்டனர். வனத்திற்குள் வாழ்ந்த பழங்கால மனிதர்கள், அவர்களின் தோற்றம், போர்க்காட்சிகள் என பல இடங்களில் அனிமேஷன் மற்றும் விஎப்எக்ஸ் பணிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில், 'கங்குவா' படத்தின் 2-ம் பாகத்தில் வில்லான நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது, வெளியாகி உள்ள டிரெய்லரின் இறுதியில் குதிரையில் வரும் ஒருவரை பார்த்து சூர்யா சிரிக்கிறார். ஆனால் அந்த நபரின் முகத்தை டிரெய்லரில் படக்குழுவினர் காட்டவில்லை. அது நடிகர் கார்த்தியாகவே இருக்க வேண்டும், என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கங்குவா தமிழ் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 20 கோடி பார்வையாளர்களைக் கடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்