< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'கங்குவா': அப்டேட் வெளியிட்ட ஒளிப்பதிவாளர்
|2 Oct 2024 7:35 AM IST
'கங்குவா' படத்தின் அப்டேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் வெளியிட்டுள்ளார்.
சென்னை,
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்றை படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி வெளியிட்டுள்ளார். அதன்படி, தற்போது 'கங்குவா' படத்தின் 3டி பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.