'கங்குவா' படத்தின் இசை வெளியீட்டு விழா - வெளியான தகவல்
|'கங்குவா' படத்தின் புரொமோஷன் பணிகளை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை,
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'கங்குவா' படத்தின் புரொமோஷன் பணிகளை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் 20-ம் தேதி சென்னையில் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.