< Back
சினிமா செய்திகள்
அவதூறு வழக்குக்கு தடை கோரி கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனு - மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி
சினிமா செய்திகள்

அவதூறு வழக்குக்கு தடை கோரி கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனு - மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி

தினத்தந்தி
|
4 Feb 2024 10:46 AM IST

ஜாவேத் அக்தர் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.

மும்பை,

பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் நடிகை கங்கனா ரணாவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கங்கனா ரணாவத் பேசியதாக ஜாவேத் அக்தர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த அறிக்கையில் கங்கனா ரணாவத் அவதூறு கருத்துகளை பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தன் மீதான அவதூறு வழக்குக்கு தடை கோரி மும்பை ஐகோர்ட்டில் கங்கனா ரணாவத் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு, கங்கனா ரணாவத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இது குறித்து நீதிபதி நாயக் அளித்த தீர்ப்பில், "ஜாவேத் அக்தர் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணை ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால் கங்கனா ரணாவத்தின் மனு தாமதமாகத்தான் கோர்ட்டுக்கு வந்தது. எனவே இந்த புதிய மனுவின் மீதான நடவடிக்கை கோர்ட்டு விசாரணையை தாமதப்படுத்தும் என்பதால், இந்த மனுவை நிராகரிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்