< Back
சினிமா செய்திகள்
எனது படம்தான் தோல்வியா? நடிகை கங்கனா காட்டம்
சினிமா செய்திகள்

எனது படம்தான் தோல்வியா? நடிகை கங்கனா காட்டம்

தினத்தந்தி
|
11 July 2022 4:08 PM IST

தனது படம் தோல்வி என்றால் நூறு கட்டுரைகள் வருகின்றன, மற்ற படங்கள் தோல்வி என்றால் ஏன் வாய் திறப்பதில்லை என நடிகை கங்கனா ஆவேசமாக கேட்டுள்ளார்.

தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக வந்த கங்கனா ரணாவத் தலைவி படத்தில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கங்கனா நடித்த இந்தி படங்கள் நல்ல வசூல் குவித்து வந்தன. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு கங்கனா நடிப்பில் வெளியான தாகத் இந்தி படம் தோல்வி அடைந்தது. ரூ.85 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.3 கோடி அளவுக்கு மட்டுமே வசூல் பார்த்ததாக கூறப்படுகிறது.

தோல்வி காரணமாக படத்தை வாங்க ஓ.டி.டி. தளங்களும் முன்வரவில்லை. தயாரிப்பாளர் தனது சொத்துகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. இந்த நிலையில் கங்கனா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ''தினமும் தாகத் படம் தோல்வி என்று வெளியாகும் செய்திகளை பார்க்க முடிகிறது. தாகத் தோல்வி படம் என்று நூறு கட்டுரைகள் வருகின்றன. ராதே ஷ்யாம், கங்குபாய் கத்யாவாடி, ஜுக் ஜுக் ஜியோ உள்ளிட்ட பல படங்கள் தோல்வி அடைந்துள்ளன. அதை பற்றி யாரும் பேசுவது இல்லை. இதற்கு என்ன காரணம். தாகத் மட்டும் தான் உங்களுக்கு தோல்வி படமாக தெரிகிறதா?" என்று காட்டமாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்