கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
|‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
மும்பை,
முன்னனி பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற நவம்பர் 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை 'எமர்ஜென்சி' படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவில் 'இந்திரா தான் இந்தியா, இந்தியா தான் இந்திரா' என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
A protector or a Dictator? Witness the darkest phase of our history when the leader of our nation declared a war on it's people.
https://t.co/oAs2nFWaRd#Emergency releasing worldwide on 24th November pic.twitter.com/ByDIfsQDM7