தன்னை வேவு பார்ப்பதாக கங்கனா ரணாவத் புகார்
|தன்னை வேவு பார்ப்பதாக கங்கனா ரணாவத் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழில் 'தாம்தூம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கங்கனா ரணாவத் தலைவி படத்தில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தன்னை வேவு பார்ப்பதாக கங்கனா ரணாவத் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''நான் எங்கு சென்றாலும் என்னை பின் தொடர்கின்றனர். என்னை யாரோ வேவு பார்க்கிறார்கள். தெருக்களிள் மட்டும் இல்லாமல் எனது பில்டிங் பார்க்கிங் எனது வீட்டு மாடியில் கூட என்னை படம் பிடிக்க ஜூம் லென்ஸ் வைத்துள்ளனர். எனது வாட்ஸ் அப் டேட்டா, தொழில் ரீதியான ஒப்பந்தங்கள், எனது சொந்த விபரங்கள் கூட லீக் ஆகிவிடுகின்றன. என்னை வேவு பார்க்கும் ஒருவர் தனது மனைவியை பெரிய நடிகையாக்க முயற்சிக்கிறார். எனது பைனான்சியர்கள் வியாபார பங்குதாரர்கள் எந்த காரணமும் இல்லாமல் கடைசி நிமிஷத்தில் ஒப்பந்தங்களை ரத்து செய்கின்றனர். அந்த நபர் என்னை தனிமைப்படுத்தி நெருக்கடிக்கு ஆளாக்க முயற்சி செய்கிறார் '' என்று குறிப்பிட்டுள்ளார்.
கங்கனா குறிப்பிடுவது நடிகர் ரன்பீர் கபூரையும் அவரது மனைவி நடிகை அலியாபட்டையும்தான் என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகிறாா்கள்.