தொழில் அதிபரை மணக்கும் கங்கனா
|பிரபல தொழில் அதிபரை கங்கனா ரணாவத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக 'தாம் தூம்' மற்றும் 'தலைவி' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் கங்கனா ரணாவத். தற்போது லாரன்சுடன் நடித்துள்ள சந்திரமுகி 2 படம் திரைக்கு வந்துள்ளது. இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
மறைந்த இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள எமர்ஜென்சி படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
அடிக்கடி சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். முன்னணி நடிகர்களை வம்புக்கு இழுத்தும் பேசப்பட்டார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திருமண பந்தத்தில் இணைய கங்கனா ரணாவத் முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது. பிரபல தொழில் அதிபரை கங்கனா ரணாவத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், வருகிற டிசம்பர் மாதம் இந்த திருமணம் நடைபெற உள்ளதாகவும் இந்தி இணைய தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனாலும் இதுகுறித்து கங்கனா தரப்பில் விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.