'கனகராஜ்யம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
|மலையாள நடிகர் இந்திரன்ஸ் நடிக்கும் 'கனகராஜ்யம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
மலையாள நடிகரான இந்திரன்ஸ், ஹோம் திரைப்படத்திற்காக தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர். இந்திரன்ஸ் மற்றும் முரளி கோபி நடிப்பில் 'கனகராஜ்யம்' என்ற மலையாள திரில்லர் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
இந்தப்படத்தினை சாகர் ஹரி இயக்கியுள்ளார். 'சத்யம் மாதமே போதிக்கூ' மற்றும் 'வீகம்' படங்களுக்குப் பிறகு சாகர் இயக்கும் மூன்றாவது படம் இது. ஸ்ரீஜித் ரவி, கோட்டயம் ரமேஷ், உன்னி ராஜ், அச்சுதானந்தன், ஜேம்ஸ் எலியா, ரம்யா சுரேஷ் மற்றும் அதிரா படேல் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் இந்திரன்ஸ் முன்னாள் ராணுவ வீரராக அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் முரளி கோபி எளிய குடும்பத்தை சேர்ந்த மனிதராக இருக்கிறார். ஆச்சரியங்களும், திருப்பங்கள் நிறைந்த கதையாக உள்ளதாக தெரிகிறது. 'கனகராஜ்யம்' ஒரு குடும்ப படம் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் இப்படம் ஜூலை 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.