கமலின் 'இந்தியன்' பட 3-ம் பாகம் வருமா?
|3 மணி நேர காட்சிகளை கட் செய்வதைவிட, படத்தின் இன்னொரு பாகமாக அதை உருவாக்கலாமா? என்று ஷங்கர் யோசித்து வருகிறாராம்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்-2' படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'இந்தியன்-2' படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பல்வேறு சோதனைகளை கடந்து வந்த 'இந்தியன்-2' படப்பிடிப்பு காட்சிகளை இயக்குனர் ஷங்கர் பார்த்திருக்கிறார். இதில் 6 மணி நேரத்துக்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 3 மணி நேர காட்சிகளை கட் செய்வதைவிட, படத்தின் இன்னொரு பாகமாக அதை உருவாக்கலாமா? என்று ஷங்கர் யோசித்து வருகிறாராம்.
அந்தவகையில் 'இந்தியன்-3' படத்தை உருவாக்கி விடும் யோசனையில் ஷங்கர் இருக்கிறாராம். அப்படி 2 பாகங்களாக இந்த கதையை உருவாக்கும் பட்சத்தில் கமல்ஹாசன் இன்னும் சில காட்சிகளில் நடிக்க வேண்டும் என ஷங்கர் விரும்புகிறாராம். அதாவது 20 முதல் 25 நாட்கள் 'கால்ஷீட்' தேவைப்படுகிறதாம்.
தற்போது 'கல்கி' படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தபிறகு கமல்ஹாசனிடம் 'இந்தியன்-3' குறித்து கலந்து பேச முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எது எப்படியோ, உலகநாயகன் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.