< Back
சினிமா செய்திகள்
கமலின் நாயகன் படம் மீண்டும் ரிலீஸ்
சினிமா செய்திகள்

கமலின் 'நாயகன்' படம் மீண்டும் ரிலீஸ்

தினத்தந்தி
|
20 Sept 2023 6:11 AM IST

கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு' படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. 'ஆளவந்தான்' படத்தையும் வெளியிட்டனர். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன், அமலா நடித்து திரைக்கு வந்த 'பேசும் படம்' என்ற படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் 'நாயகன்' படமும் மீண்டும் ரிலீசாக இருப்பதாக அறிவித்து உள்ளனர். இந்த படத்தை டிஜிட்டலில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நவம்பர் முதல் வாரத்தில் 'நாயகன்' படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

'நாயகன்' படம் மணிரத்னம் இயக்கத்தில் 1987-ல் திரைக்கு வந்தது. சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இளையராஜா இசையில் இடம்பெற்ற 'நீ ஒரு காதல் சங்கீதம்', 'அந்தி மழை மேகம்', 'நான் சிரித்தால் தீபாவளி', 'நிலா அது வானத்து மேலே', 'தென்பாண்டி சீமையிலே' ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் 'நாயகன்' படம் பெற்றுக்கொடுத்தது.

மேலும் செய்திகள்