அமெரிக்காவில் ரசிகர்களை சந்தித்த கமல்..!
|தன்னை காண வந்த ரசிகர்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்தார். தெருவில் தனியாகவும் நடந்து சென்றார்
கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் பிரபாஸ் நாயகனாக வருகிறார். இவருக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். படத்துக்கு 'புராஜெக்ட் கே' என்று தற்காலிகமாக பெயர் வைத்து இருந்தனர்.
அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை கீர்த்தி சுரேசை வைத்து நடிகையர் திலகம் படத்தை எடுத்து பிரபலமான நாக் அஸ்வின் டைரக்டு செய்கிறார். ரூ.400 கோடி பட்ஜெட்டில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த காமிக் கான் நிகழ்ச்சியில் கமல்ஹாசன், பிரபாஸ், நாக் அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டு படத்துக்கு 'கல்கி' என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவித்து அது சம்பந்தமான வீடியோவை வெளியிட்டனர். மேலும் அமெரிக்காவில் தன்னை காண வந்த ரசிகர்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்தார். தெருவில் தனியாகவும் நடந்து சென்றார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகின்றன.