சிம்பு படத்தை தயாரிக்கும் கமல்
|சிம்பு நடிக்கும் புதிய படத்தை தேசிங்கு பெரியசாமி டைரக்டு செய்கிறார். இவர் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கி பிரபலமானவர். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன், ஆர்.மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதுகுறித்து கமல்ஹாசன் கூறும்போது, ``தரமான படங்களை தர வேண்டும் என்பது ராஜ் கமல் பட நிறுவனத்தின் லட்சியம். இது நாற்பது ஆண்டுகளாக தொடர்கிறது. எங்கள் நோக்கத்துக்கு ஏற்ற வகையில் இந்த படம் அமைந்துள்ளது. சிலம்பரசன், தேசிங்கு பெரியசாமி மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்'' என்றார்.
டைரக்டர் தேசிங்கு பெரியசாமி கூறும்போது, ``இது எனது மனதுக்கு நெருக்கமான தனித்துவமான கதை. கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது பெருமை'' என்றார். ``ஒரு சிறந்த கதைக்கான எனது நீண்ட தேடலுக்கு சரியான வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது. என் நடிப்பு வாழ்க்கையில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும்'' என்று சிலம்பரசன் கூறினார். இதர நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.