< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
மீண்டும் பெண் வேடத்தில் கமல்?

29 July 2023 6:30 AM IST
கதை, கதாபாத்திரங்களுக்கு ஏற்ற மாதிரி தோற்றத்தை மாற்றும் நடிகர்களில் முதன்மையானவர் கமல்ஹாசன். 'அவ்வை சண்முகி' படத்தில் பெண் வேடமிட்டு அவர் நடித்த காட்சிகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அவ்வளவு தத்ரூபமாக பெண் வேடத்துக்கு பொருந்தி இருந்தார்.
அந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பெரிய வெற்றியை பெற்றது. பிரபலங்கள் பலரும் கமலின் பெண் வேடத்தை பாராட்டி இருந்தனர். 'அவ்வை சண்முகி' படத்தை தொடர்ந்து 'தசாவதாரம்' படத்திலும் வயதான பாட்டி கதாபாத்திரத்தில் கமல் நடித்து இருந்தார். அதில் பலமணி நேரம் கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு நடித்தார்.
இந்த நிலையில் மீண்டும் 'இந்தியன் 2' படத்திலும் முக்கியமான காட்சியொன்றில் கமல்ஹாசன் பெண் வேடமிட்டு நடித்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.