< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற கமல் ! ரசிகர்கள் பாராட்டு !!....
|28 May 2023 2:29 PM IST
அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்தியா திரைப்பட விழாவில் நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அபுதாபி,
இந்த ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது (IIFA 2023) வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்தி திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த பிரமாண்ட விழாவில், தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அசாத்திய திறமையால் மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் சாதனையை பாராட்டும் விதமாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி, நடிகர் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
நடிகர் கமலுக்கு இந்த விருதை இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார். கமல் விருதை பெற்றவுடன் அரங்கத்தில் இருந்த நடிகர் சல்மான் கான் உட்பட அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி ஆரவார படுத்தினர்.